Enable Javscript for better performance
விபத்தில் இறந்த ஆசிரியைகுடும்பத்துக்கு ரூ. 55 லட்சம் இழப்பீடு- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் இறந்த ஆசிரியைகுடும்பத்துக்கு ரூ. 55 லட்சம் இழப்பீடு

    By தஞ்சாவூர்,  |   Published on : 19th April 2013 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்துக்கு ரூ. 55 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

    தஞ்சாவூர் மாதாகோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி 11-வது தெருவைச் சேர்ந்தவர் அனந்தராமன் மனைவி உஷா ஜானகி (40). பிள்ளையார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை.

    இவர் 2011 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பகுதியில் எலக்டிரிக் மொபெட் மூலம் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் உஷா ஜானகி உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக இழப்பீடு வழங்கக் கோரி, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அனந்தராமன் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த முகமது அலி உயிரிழந்த உஷா ஜானகியின் குடும்பத்துக்கு ரூ. 55,50,500 இழப்பீடு வழங்குமாறு யுனைடெட் இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தின் தஞ்சை கிளைக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai