Enable Javscript for better performance
\\\"அனுமதி பெற்றே விளம்பரத் தட்டிகள் வைக்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "அனுமதி பெற்றே விளம்பரத் தட்டிகள் வைக்க வேண்டும்'

    By கும்பகோணம்,  |   Published on : 20th April 2013 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் பகுதியில் உரிய அனுமதி பெற்ற பின்னரே விளம்பரத் தட்டிகளை அரசியல் கட்சியினர் வைக்க வேண்டும் என காவல் துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் டிஎஸ்பி சிலம்பரசன் பேசியது:

    தஞ்சை மாவட்டத்தில் சில இடங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் சேதப்படுத்தப்பட்டதால் சட்டம் -  ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. கும்பகோணம் பகுதியில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருப்பதற்காக, விளம்பரத் தட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.

    அரசியல் கட்சியினர் விளம்பரத் தட்டிகள் வைக்கப்படும் இடங்களை முன்கூட்டியே தேர்வு செய்து, நகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர், காவல் துறை, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றே விளம்பரத் தட்டிகளை வைக்க வேண்டும். கோவில், சர்ச், மசூதி மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் இடங்களில் தட்டிகளை வைக்கக் கூடாது என்றார் சிலம்பரசன்.

    சட்டத்தின்படி எந்த விளம்பரத் தட்டிகளையும் வைக்க முடியாது. மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால்தான் வைக்க முடியும் என்றால், தஞ்சைக்கு சென்று அனுமதி பெறுவது கடினம். அந்த அனுமதியை கும்பகோணத்திலேயே வழங்க வேண்டும். நிகழ்ச்சி நாளுக்கு மூன்று தினங்களுக்கு முன்பும், முடிந்த பின்னர் இரு தினங்களுக்கும் அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

    ஆனால், டிஎஸ்பியோ சட்டத்தின்படிதான் விளம்பரத் தட்டிகளை வைக்க வேண்டும். அனுமதி இல்லாத விளம்பரத் தட்டிகள் அகற்றப்படும் என்றார்.

    கூட்டத்தில் திமுக சார்பில் தமிழழகன், ஆசைத்தம்பி, காங்கிரஸ் சார்பில் கோவிந்தராஜ், முருகன், பாமக சார்பில் ஜெயராமன், கணேசன், ரஞ்சித், பாஜக கோதண்டராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குருசாமி, பார்த்தசாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாமிநாதன், வீரமணி, தேமுதிக சங்கர், அழகர், இந்து மக்கள் கட்சி குருமூர்த்தி, நாம் தமிழர் இயக்கம் ஆனந்த், தமுமுக முகமதுரபீக், முகமதுசெல்லப்பா, அதிமுகவின் மாணிக்கவேல், தமிழ்ச்செல்வி மற்றும் காவல் ஆய்வாளர்கள் அழகேசன், முருகவேல், பாலசுந்தரம், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai