Enable Javscript for better performance
இலக்கியம் மனிதனை பண்பாளனாக மாற்றுகிறது என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா - Dinamani

சுடச்சுட

    

    இலக்கியம் மனிதனை பண்பாளனாக மாற்றுகிறது என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா

    By தஞ்சாவூர்  |   Published on : 20th April 2013 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலக்கியம் மனிதனை பண்பாளனாக மாற்றுகிறது என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா

    தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்தமிழ் விழாவில் அவர் மேலும் பேசியது:

    எல்லா சமூகங்களுக்கும் சிறப்பான பண்பாடு உள்ளது. தமிழன்என்பவர் யார் என தெளிவாக புரிந்து கொள்ளும் போக்கே இப்போது இல்லை.

    எந்த ஒரு முயற்சியும் செய்யாதவர்கள் தமிழர்கள் அல்லர். தமிழர்களுடைய பண்பாட்டில் ஒழுக்கம் நிறைந்திருந்தது. இன்றைய நிலையில் தமிழ்ப் பண்பாடு மாறி வருகிறது.  உலகுக்கே உணவளிக்கும் விவசாயத்தில் லாபம் பார்க்கக்கூடாது. விவசாயம் நலிவடைந்ததற்கு நீராதாரம் குறைந்ததே காரணம். தற்போது பணத்துக்காக லாரிகளில் மணல் ஏற்றப்படுகிறது. மணலில் சொட்டும் நீர் அந்நதியின் கடைசி துளியான கண்ணீரே. எனவே நதிகளில் மணல் அள்ளுவதை அரசு தடுக்க வேண்டும். குறைவான நீரில் விளைச்சலைக் கொண்டு வருவது எப்படி எனக் கற்றுக் கொடுத்தவன் தமிழன். ஆனால், இன்றைய விவசாயம் தமிழனுக்கு கானல் நீராகிவிட்டது. இந்தியா முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் கிராமங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதுதான். விளையாட்டில் இந்தியா ஜொலிக்க வேண்டுமானால் வீரர்களை கிராமங்களில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

    மாணவர்கள் அரசியல், விளையாட்டு, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மனிதன் மனிதனாக இருக்க இலக்கியம் கட்டாயம் கற்க வேண்டும் என்றார் நந்தலாலா.

    மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் பா. பாரதிதாசன் தலைமை வகித்தார். செயலர் சுஜாதா பாரதிதாசன், கல்லூரி முதல்வர் ந. ஞானதிரவியம், கல்வியியல் கல்லூரி முதல்வர் ப. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai