Enable Javscript for better performance
\\\"கிராமங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    "கிராமங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்

    By 'தஞ்சாவூர்,  |   Published on : 20th April 2013 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    பனகல் கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி தலைமை வகித்தார்.

    இதில், நடைபெற்ற விவாதம்:

    தி. மெய்க்கப்பன்: முன்பை விட இப்போது மின் வெட்டு பிரச்னை குறைந்துள்ளது. என்றாலும், மும்முனை மின் வினியோகம் போதிய அளவு இல்லாததால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏறுவதில்லை. இதனால், கிராமங்களில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. இதைத் தவிர்க்க ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    எஸ். குலோத்துங்கன்: அம்மாபேட்டை ஒன்றியத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, சூரியக்கோட்டை பகுதியில் நிலத்தில் குழி தோண்டி தண்ணீர் எடுக்கின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்.

    செ. அருள்நம்பி: மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரும் தகவல் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் வரும் வகையில் பேராவூரணி பகுதி ஏரி, வாய்க்கால்களை தூர் வார வேண்டும்.

    சி. நவநீதம்: அம்மாபேட்டை ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளதால், ஆங்காங்கே மினி டேங்குகளை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்ட ஊராட்சி செயலர் சுரேஷ்: குடிநீர் பிரச்னையை தவிர்ப்பதற்காக மாவட்டத்தில் 418 இடங்களில் ரூ.6 கோடி செலவில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக அமைச்சர், ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை 50 பணிகள் நிறைவடைந்துள்ளன.

    ஒப்பந்தப்புள்ளி கோருவது குறித்த தகவல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கும் அளிக்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai