Enable Javscript for better performance
குடந்தை ராமசுவாமி கோவில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநவமி பெருவிழாவையொட்டி கும்பகோணம் ராமசுவாமி திருக்கோவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    தென்னக அயோத்தி என போற்றப்படும் இக்கோவில், தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டது.

    புகழ்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ராமநவமி பெருவிழா ஏப்.11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான வெள்ளிக்கிழமை ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.

    முன்னாள் எம்.எல்.ஏ. ராம. ராமநாதன் உள்ளிட்டோர் தேரின் வடம்பிடித்து இழுத்தனர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    நகர்மன்றத் தலைவர் ரத்னா, துணைத் தலைவர் ராஜா நடராஜன், வர்த்தக சங்கத் தலைவர் கே.எஸ். சேகர், கோவில் நிர்வாக அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இரவு தீர்த்தவாரி நடைபெற்றது. சனிக்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai