Enable Javscript for better performance
குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளம் அருகே கிராம மக்கள் குடிநீர் பிரச்னைக்காக வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

    மருங்குளம் அருகே உள்ள வெட்டுப்பள்ளம் பகுதியில் நீண்ட நாள்களாக குடிநீர் பிரச்னை நிலவி வருகிறதாம். இந்த பிரச்னைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், வெட்டுப்பள்ளம் பேருந்து நிறுத்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

    தகவலறிந்த வல்லம் போலீஸார் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் ஆகியோர், குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai