குப்பைகள் அள்ள நவீன வாகனம்
By தஞ்சாவூர், | Published on : 20th April 2013 04:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சாவூர் நகராட்சியில் குப்பைகள் அள்ள சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட நவீன வாகனம் மற்றும் 22 குப்பைத் தொட்டிகள் வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.
ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக ரூ.22.25 லட்சம் மதிப்பில் 7 டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன வாகனம் வாங்கப்பட்டுள்ளது. ரூ.7.30 லட்சம் மதிப்பில் 2.5 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 22 குப்பைத் தொட்டிகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட இந்த வாகனம் மற்றும் குப்பைத் தொட்டிகளை நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், நகர் நல அலுவலர் சிவநேசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
பின்னர், ஆணையர் தெரிவித்தது:
இந்த நவீன வாகனத்தில் ஒரு நடைக்கு 5 டன் குப்பைகள் அள்ளலாம். 22 குப்பைத் தொட்டிகளும் முதன்மை சாலைகளில் வைக்கப்படும். இதேபோல மேலும், 60 குப்பைத் தொட்டிகள் வாங்கப்படவுள்ளன என்றார்.