Enable Javscript for better performance
தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலருக்கு \\\"சுஷமீந்திர புரஷ்கார்\\\' விருது- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலருக்கு "சுஷமீந்திர புரஷ்கார்' விருது

    By கும்பகோணம்  |   Published on : 20th April 2013 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலரின் சேவையை பாராட்டி, அவருக்கு, ராகவேந்திர சுவாமிகள் மடத்தின் சார்பில் சுஷமீந்திர புரஷ்கார் விருது வழங்கப்பட உள்ளது.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துங்கபத்திரா நதிக்கரையில் மந்திராலயம் எனப்படும் ராகவேந்திர சுவாமிகள் மடம் இயங்கி வருகிறது. இந்த மடத்தின்  பீடாதிபதியாக இருந்த சுஷ்மீந்திர தீர்த்த சுவாமிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் முக்தி அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரின் ஆராதனை விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி சேவை செய்து வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கப்படுகிறது. அதன்படி ஏப்.24-ம் தேதி தொடங்கும் 5-ம் ஆண்டு ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான ஏப்.27-ம் தேதி நடைபெறும் விழாவில் தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். சுரேஷ்குமாருக்கு, அவரது சேவையைப் பாராட்டி சுஷமீந்திர புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது என கும்பகோணம் விஜயேந்திர சுவாமிகள் மடத்தின் மேலாளர் பாஸ்கர், மாதவன், விஷ்ணுபாலாஜி ஆகியோர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai