Enable Javscript for better performance
பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரகத்தில், தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் புதன்கிழமை அளித்த மனு:

    தென்னங்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அண்மையில் முகமுடி அணிந்த 3 பேர், இந்த நிலையத்தில் பணிபுரியும் செவிலியரையும், இரவு நேர காவலாளியையும் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். எனவே, இந்த நிலையத்துக்கு இரவு நேரத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai