Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் இன்று தொடக்கம்

    By தஞ்சாவூர்,  |   Published on : 20th April 2013 04:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் சனிக்கிழமை (ஏப்.20) முதல் நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் மேலும் தெரிவித்திருப்பது:

    அந்தந்த சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பு மதிப்பீட்டு முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது.

    ஒரத்தநாடு தூய மாதா நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 10 மணிக்கும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை தீர் கூட்ட அரங்கில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கும், திருவிடைமருதூர் சட்டபேரவை உறுப்பினர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கும் முகாம் நடைபெறவுள்ளது. ஏப். 27-ம் தேதி காலை 10 மணிக்கு பாபநாசம் வித்யா பாடசாலையிலும், பிற்பகல் 3 மணிக்கு திருவையாறு அரசர் கலைக் கல்லூரியிலும், 28-ம் தேதி காலை 10 மணிக்கு கும்பகோணம் பல்நோக்கு சமூகச் சேவை மையத்திலும் நடைபெறவுள்ளது. மே 1-ம் தேதி காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், பிற்பகல் 3 மணிக்கு பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.

    கை, கால் மாற்றுத் திறனுடைய நபர்களுக்கு மூன்று சக்கர வண்டிகள், சக்கர நாற்காலிகள், முடநீக்கியல் சாதனம், செயற்கை அவயம், ஊன்றுகோல் ஆகியவையும், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத நபர்களுக்கு காதொலிக் கருவி, சூரியஒளியால் சக்தி பெறும் மின் கலம் ஆகியவையும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, மடக்கு சக்கர நாற்காலியும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கறுப்புக் கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல், பிரெய்லி கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டையின் நகலுடன் வர வேண்டும் என்றார் பாஸ்கரன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai