Enable Javscript for better performance
ராஜபட்சவைக் கண்டித்து கும்பகோணத்தில் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜபட்சவைக் கண்டித்து கும்பகோணத்தில் உண்ணாவிரதம்

    By கும்பகோணம்,  |   Published on : 20th April 2013 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி, தஞ்சை மாவட்ட கூலி அரவை ரைஸ், பிளவர் மில் உரிமையாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத் தலைவர் டி. இளவரசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் டி.எஸ். மூர்த்தி, பி. செல்வம், யு. பன்னீர்செல்வம், எஸ். முருகன், ஆர். ரமேஷ், ஜி. முருகபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க வேண்டும். இந்தியாவுடன் கச்சத்தீவை இணைக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பன வலியுறுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai