Enable Javscript for better performance
விடுபட்டவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    விடுபட்டவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வலியுறுத்தல்

    By தஞ்சாவூர்,  |   Published on : 20th April 2013 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விடுபட்ட குடும்பங்களுக்குத் தனி முகாம் நடத்தி ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

    தஞ்சாவூரில் இந்த அமைப்பின் மாவட்டக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தமயந்தி திருஞானம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோடையில் அனைத்து நகராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சை ரயில் நிலையத்தில் உள்ளேயும், வெளியேயும் பயணிகள் வசதிக்காக கூடுதல் கழிப்பறைகளை அமைக்க வேண்டும். கிராம ஊராட்சி, பேரூராட்சி பகுதியில் திறந்தவெளி கழிப்பிடத்தைத் தவிர்க்க நவீன கழிப்பறைகளைத் தண்ணீர் வசதியுடன் கட்ட உள்ளாட்சி, சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    திருவிடைமருதூர், பாபநாசம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கும் பணியைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இரா. திருஞானம், சம்மேளன மாவட்டச் செயலர் எம். விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai