Enable Javscript for better performance
அனைத்து பள்ளிகளிலும் குப்பைகள் சேகரிக்க கவின்மிகு தஞ்சை இயக்கம் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து பள்ளிகளிலும் குப்பைகள் சேகரிக்க கவின்மிகு தஞ்சை இயக்கம் முடிவு

    By தஞ்சாவூர்,  |   Published on : 21st April 2013 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குப்பைகளைச் சேகரிக்க கவின்மிகு தஞ்சை இயக்கம் முடிவு செய்துள்ளது.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பதிவுத் துறை அலுவலர் காலனியில் உள்ள திருமகள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளால் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கவின் மிகு தஞ்சை இயக்கம் சார்பில் பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    இதில், பள்ளி மாணவ, மாணவிகள் வீட்டிலும், பள்ளியிலும் சேகரித்த குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் எனத் தனித்தனியாகப் பிரித்தனர். இந்தக் குப்பைகளை கவின் மிகு தஞ்சை இயக்கம் சார்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகக் கூடுதல் பதிவாளர் கி. சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார்.

    பின்னர், சுவாமிநாதன் பேசியது: இதேபோல, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் சேகரித்த குப்பைகளைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக தஞ்சை நகரில் உள்ள பள்ளிகளுக்கு வாரந்தோறும் ஒரு நாள் சென்று குப்பைகளைச் சேகரிக்கத் திட்டமிட்டப்பட்டுள்ளது.

    இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று குப்பைகள் சேகரிக்கப்படவுள்ளன. பெரியவர்களை விட மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பயன் தரும் என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தை முன் மாதிரி மாவட்டமாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிக்குப் பள்ளிகள் ஒத்துழைப்பு அளிக்கக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் சுவாமிநாதன்.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கிப் பிரிவு அலுவலர் ராதிகா மைக்கேல், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் பருவநிலை மாற்ற மைய இயக்குநர் செüமியன், பள்ளிச் செயலர் டி.ஜி. வெங்கடாசலம், தலைமையாசிரியை வீ. செந்தாமரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai