Enable Javscript for better performance
\\\"இலக்கியம் மனித நேயத்தை கற்பிக்கிறது\\\' - Dinamani

சுடச்சுட

    

      இலக்கியம் மனித நேயத்தைக் கற்பிக்கிறது என்றார் மலேசிய நாட்டில் உள்ள டெய்லர் பல்கலைக்கழகக் கல்வியியல் புல முதன்மையர் மலாச்சி எட்வின் வேதமணி.

    தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நவீன ஆங்கில இலக்கியத்தில் மனிதநேய அணுகுமுறை குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:

    பாரம்பரிய மதங்கள் மீதான நம்பிக்கைக்கு மாற்றாகவும், நம் உடல், மன நலன் திறன் மேம்படவும் மனிதநேயம் பயன்படுகிறது.

     மனித நேயம் என்பது நெறிமுறை, பகுத்தறிவு உடையது என்பதால் அது, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக்குப் பக்கபலமாக இருக்கிறது.

     மனிதநேயம் ஒவ்வொருவரிடத்திலும் வெவ்வேறு மாதிரியாக இருக்கிறது. ஆனால், இதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான அறநெறியையும், நெறிமுறை அணுகுமுறையையும் வரையறை செய்கின்றன.

    பால் கர்ட்ஸ் அறிமுகப்படுத்திய புதிய மனிதநேயம் மதச்சார்பற்ற மனித நேயத்தை விவரிக்கிறது. இது, ஜனநாயகம், சகிப்புத்தன்மை, நேர்மை போன்றவற்றை வலியுறுத்துகிறது என்றார் மலாச்சி எட்வின் வேதமணி.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் என். கலாமணி பேசியது:

    தனி நபர் முழுமையான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை மனித நேயம் வலியுறுத்துகிறது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்துதான் மறுமலர்ச்சி மனித நேயம், கிறிஸ்துவ மனித நேயம், புதிய மனித நேயம் போன்றவை தோன்றின என்றார் கலாமணி. கல்லூரி முதல்வர் கே. அன்பு தலைமை வகித்தார்.

    முன்னதாக, ஆங்கிலத் துறைத் தலைவர் ஆர். பார்த்திபன் வரவேற்றார். பேராசிரியர் ஜி. அருணாசலம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai