Enable Javscript for better performance
சாஸ்த்ரா பல்கலை.யில் சிறந்த மாணவருக்கு டிசிஎஸ் விருது- Dinamani

சுடச்சுட

    

    சாஸ்த்ரா பல்கலை.யில் சிறந்த மாணவருக்கு டிசிஎஸ் விருது

    By தஞ்சாவூர்  |   Published on : 21st April 2013 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவருக்கு டி.சி.எஸ். விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

    பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் நான்காம் ஆண்டு கணினி பொறியியல் மாணவர் முனுரு. பி. வெங்கடபவனுக்கு இந்த விருதை டிசிஎஸ் நிறுவன தென் மண்டல அங்கீகாரப் பிரிவு தலைவர் ஏ.கே. பட்டாபிராமன் வழங்கினார். அப்போது வெங்கடபவனுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ், ரூ.10,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து, பட்டாபிராமன் பேசியது:

    டிசிஎஸ் நிறுவனம் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கத் தேர்வு செய்த 100 கல்வி நிறுவனங்களில் சாஸ்த்ரா பல்கலைக்கழகமும் ஒன்று. பல்கலைக்கழக அளவில் செயல்பாடுகள், கல்வியில் தனித்தன்மை மற்றும் தொழில்நுட்ப ஈடுபாடு ஆகியவை இதற்கான தகுதிகள்.

    இந்தப் பல்கலைக்கழக நான்காம் ஆண்டு மெக்கட்ரானிக் மாணவர் யு. மதுசூதனன், 4,000 திவ்ய பிரபந்த பாசுரங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்ததை பாராட்டும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். சேதுராமன் அந்த மாணவரின் 4 ஆண்டுகளுக்கான முழுக்  கல்விக் கட்டணம் ரூ.2.80 லட்சத்தை வழங்கினார். அதற்கான காசோலையை பட்டாபிராமன் மாணவரிடம் வழங்கினார்.

    மேலாண்மைத் துறைத் தலைவர் வி. பத்ரிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai