Enable Javscript for better performance
\\\"திருந்திய நெல் சாகுபடி மூலம் இரு மடங்கு மகசூல் பெறலாம்- Dinamani

சுடச்சுட

    

    இரு மடங்கு மகசூல் பெற விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றார் பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் ஆர். மோகன்.

    பட்டுக்கோட்டை ஒன்றியம், கூத்தாடிவயல் கிராமத்தில் நெல் உற்பத்தியை உயர்த்துவது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது:

    கூத்தாடிவயலில் சுமார் 465 ஏக்கரில் ஒரே போகமாக சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி பரப்பை உயர்த்த வாய்ப்பு இல்லாததால் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் மூலம் மகசூலை இரு மடங்காக உயர்த்தலாம்.

    இதற்கு தரச் சான்று பெற்ற உயர் விளைச்சல், வீரிய ஒட்டு ரகங்களைப் பயன்படுத்த வேண்டும். 1 ஏக்கர் நடவு செய்ய 2 கிலோ விதை போதுமானது. 1 ஏக்கருக்கு 1 சென்ட் சுருள்பாய் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். நடவு வயலை துல்லியமாக சமன் செய்து, 14 நாள்கள் வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 22.5 செ.மீ.க்கு 22.5 செ.மீ. என்ற சதுர முறையில், குத்துக்கு 1 நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். 2.5 செ.மீ.க்கு அதிகமாக நீர் நிறுத்தக் கூடாது.

    கோனோவீடர் கருவியைக் கொண்டு களையெடுக்க வேண்டும். நடவு செய்த 10-ம் நாள் முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை வீதம் 4 முறை களையெடுக்க வேண்டும். தழைச் சத்தை மேலுரமாக இட வேண்டும் என்றார்.

    அடுத்து, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள் குறித்து வேளாண் அலுவலர்கள் ஜி. சாந்தி, ஜகதீஸ்வர் ஆகியோர் விளக்கினர். உதவிக் கால்நடை மருத்துவர் பார்த்தசாரதி,

    உதவிப் பொறியாளர் சரவணபவா, பண்ணவயல் ஊராட்சித் தலைவர் சு. ராஜாதம்பி, துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் புஷ்பநாதன் மற்றும் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நெல், உளுந்து பயிரில் விதை நேர்த்தி செய்தல், ஊட்டமேற்றிய தொழு உரம், தென்னைக்கு உரமிடுதல், எலி ஒழிப்பு ஆகியன குறித்து கூட்டத்தில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 25 விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் தென்னங்கன்றுகள், சணப்பு விதைகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai