Enable Javscript for better performance
நகராட்சி சார்பில் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நகராட்சி சார்பில் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு

    By தஞ்சாவூர்  |   Published on : 21st April 2013 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் நகராட்சியில் வீடு வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

    திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நகராட்சி எல்லைக்கு உள்பட்ட 23-வது வார்டில் இந்தப் பணியை நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் தொடக்கி வைத்தார்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன் தெரிவித்தது:

    இந்த வார்டில் உள்ள 815 வீடுகளில் குப்பைகளைச் சேகரிப்பதற்காக 18 துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிப்பர்.

    படிப்படியாக நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் வீடுகளுக்குச் சென்று குப்பைகள் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்துக்காக நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன என்றார் அவர்.தொடக்க விழாவில் நகர் நல அலுவலர் சிவநேசன், நகர் மன்ற உறுப்பினர் எம். பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai