Enable Javscript for better performance
வளாக நேர்காணல்: ஏனாதி ராஜப்பா கல்லூரி மாணவர்கள் 40 பேர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    வளாக நேர்காணல்: ஏனாதி ராஜப்பா கல்லூரி மாணவர்கள் 40 பேர் தேர்வு

    By பட்டுக்கோட்டை  |   Published on : 21st April 2013 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏனாதி ராஜப்பா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணல் மூலம் அக்கல்லூரி மாணவர்கள் 40 பேர் சென்னையிலுள்ள இரு நிறுவனங்களில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டனர்.

    சென்னையிலுள்ள சதீஷ் ஷொலிஷன் என்ற வணிகத் தொடர்பு பரிமாற்ற நிறுவனம், ஷுஸ் ஷொலிஷன் என்ற மென் பொருள் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்ற தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான வளாக நேர்காணல் ஏனாதி ராஜப்பா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

    இதையொட்டி, இரு நிறுவனங்களும் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றை நடத்தியது. இதில் சதீஷ் ஷொலிஷன் நிறுவனம் நடத்திய தேர்வில் பங்கேற்ற 216 மாணவர்களில் 20 பேரும், ஷுஸ் ஷொலிஷன் நிறுவனம் நடத்திய தேர்வில் பங்கேற்ற 150 மாணவர்களில் 20 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கும் பணியில் சேர்வதற்கான கடிதம் வழங்கப்பட்டது.

    ஜூன் 15-ம் தேதி இவர்கள் பணியில் சேரவுள்ளனர்.

    இவர்களுக்கு கல்லூரிச் செயலர் பி. கணேசன், முதல்வர் தி. உதயகுமார், வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai