கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எழுத்துத் தேர்வு
By கும்பகோணம் | Published on : 22nd April 2013 01:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கும்பகோணம் கோட்டத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்துள்ள 66 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிர்வாகம் தொடர்பான எழுத்துத் தேர்வு நகர மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் கருணை அடிப்படையில் கும்பகோணம் வட்டத்தில் 20 பேரும், திருவிடைமருதூர் வட்டத்தில் 17 பேரும், பாபநாசம் வட்டத்தில் 28 பேரும் உள்ளிட்ட 66 பேர் புதிதாக கிராமநிர்வாக அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடந்த பிப்.9 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை நில அளவை தொடர்பான பயிற்சி நடைபெற்றது.
இதையடுத்து பயிற்சியின் நிறைவாக துறை தொடர்பாகவும், கிராம நிர்வாக அலுவலர்களின் அதிகாரங்கள், கடமைகள் குறித்த எழுத்து தேர்வு, நில அளவைக்கான மாதிரி படம் வரைதல் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வினை ஆர்டிஓ சங்கரநாராயணன், வட்டாட்சியர் ஸ்ரீமாதவன் ஆகியோர் பார்வையிட்டனர்.