Enable Javscript for better performance
உணவு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

      கும்பகோணத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறையினர்  ஆய்வு மேற்கொண்டனர்.

    கும்பகோணம் நகர பகுதியில் பல்வேறு உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை நியமன அலுவலர் தெட்சிணாமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மகேஷ், கார்த்திக், வடிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

    8 இடங்களில் மேற்கொண்ட ஆய்வில் ரூ. 50,000 மதிப்புள்ள தரமற்ற மற்றும் காலாவதியான ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், சர்பத், ஸ்வீட் வகைகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை நியமன அலுவலர் தெட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai