Enable Javscript for better performance
\\\"உலகின் பார்வையை இந்தியாவுக்கு திருப்பியவர் கல்பனா சாவ்லா\\\'- Dinamani

சுடச்சுட

    

    "உலகின் பார்வையை இந்தியாவுக்கு திருப்பியவர் கல்பனா சாவ்லா'

    By கும்பகோணம்,  |   Published on : 22nd April 2013 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக நாடுகளின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பியவர் கல்பனா சாவ்லா' என்றார் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை அமைப்பின் தலைவரும், வழக்குரைஞருமான ஸ்டாலின் குணசேகரன்.

    கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு அவர் மேலும் பேசியது:    

    பொறியியல் படிக்க யாரும் முன்வராத காலத்தில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கல்பனாசாவ்லா என்ற பெண் பொறியாளராக படித்து அமெரிக்காவுக்கு சென்று பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு விண்வெளிக்குச் சென்ற பின்னர் உலகமே இந்தியா பக்கம் தன் பார்வையை திரும்பி பார்க்க வைத்தார்.

    125 ஆம் ஆண்டு விழாவை நாம் கொண்டாடி வரும் கணித மேதை ராமானுஜன் அதிகம் படிக்காதவர். அவருடைய கணிதத் திறமையை உலகமே போற்றி வருகிறது. ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்ந்து, சாதனைகளை புரிந்தார் என்பதுதான் முக்கியம்.

    500 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அமெரிக்காவை காட்டிலும், 2300 ஆண்டுகளுக்கு முன்பே நம்நாட்டில் நாலந்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

    நாம் நதிகளை இணைக்க வேண்டும் என கூறி வருகிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பவானியையும், நொய்யல் ஆற்றையும் காளிங்கராயன் என்பவர் இணைத்தார். அதே போல் கரிகால்சோழன் கட்டிய கல்லணை இன்றளவும் பொறியாளர்களாகிய உங்களுடைய பணிக்கு வழிகாட்டியாக உள்ளது என்றார்.

    விழாவுக்கு கல்லூரித் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில்குமார், ஆலோசகர் கோதண்டபாணி, ஆடிட்டர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கமால்பாட்சா வரவேற்றார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai