Enable Javscript for better performance
ஏப். 26-ல் விவசாயிகள்குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப். 26-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்

    கரன் மேலும் தெரிவித்திருப்பது:

    இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

    மேலும், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் நீர்ப் பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம்.

    இதில், கருத்துகளை தெரிவிக்க விரும்புபவர்கள் தங்களது பெயர், ஊர், வட்டாரத்தை ஏப். 26-ம் தேதி காலை 8.30 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு வட்டாரத்துக்கும் பதிவு செய்துள்ள விவசாயிகளில் முதல் இருவர் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க அனுமதிக்கப்படுவர் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai