குடந்தையில் விலையில்லா மடிக்கணினி
By கும்பகோணம் | Published on : 22nd April 2013 01:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கும்பகோணம் அரசினர் ஆடவர் மற்றும் மகளிர் கலைக் கல்லூரிகளில் பயிலும் 2106 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை தஞ்சாவூர் எம்எல்ஏ ரெங்கசாமி சனிக்கிழமை வழங்கினார்.
கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி ஆட்சிமன்றத் குழுத் தலைவர் ராம.ராமநாதன் தலைமை வகித்தார். தஞ்சை சட்டப்பேரவை உறுப்பினர் ரெங்கசாமி 896 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்பை வழங்கினார்.
ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் ச. மணி, ஆடிட்டர் எம். ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கோவிந்ததாஸ் வரவேற்றார்.
தஞ்சை மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க துணை ஆட்சியர் குணசேகரன், நகர்மன்ற தலைவர் ரத்னாசேகர், துணைத் தலைவர் ராஜாநடராஜன், ஒன்றிய குழுத் தலைவர் கோவி.மகாலிங்கம், துணைத் தலைவர் அழகு.த. சின்னையன், அரசு வழக்குரைஞர் சோழபுரம் அறிவழகன், அதிமுக நிர்வாகி பி.எஸ். சேகர், உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர். இதே போல் கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 1210 மாணவிகளுக்கு லேப்டாப்பை எம்எல்ஏ ரங்கசாமி வழங்கினார்.