Enable Javscript for better performance
சுந்தரமகாகாளியம்மன் கோவிலில் படுகளக் காட்சி- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் சுந்தரமகாகாளியம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பச்சைக்காளி, பவழக்காளி படுகள காட்சியும், பிறந்த வீட்டு அழைப்பும், வீதியுலாவும் நடைபெற்றது.

    கும்பகோணம் கும்பேஸ்வரன் தெற்கு வீதியில் உள்ள இக்கோவிலிலில் 121- வது ஆண்டு பிரமோத்சவ விழா கடந்த 11 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 12 ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும் 19 ஆம் தேதி காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், வேல்புறப்பாடும் நடைபெற்றது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை கோவிலிலிருந்து பச்சைக்காளியும், பவழக்காளியும் படுகளகாட்சியை கண்டனர். அப்போது கோவில் முன்பு குவிந்திருந்த பக்தர்களுக்கு மஞ்சள்நீர் தெளித்து அவர்களுடைய பாவங்களை போக்கினர்.

    தொடர்ந்து பச்சைக்காளியும் பவழக்காளியும் ஊஞ்சல் உற்சவம் கண்டனர். பின்னர் பிறந்த வீட்டுக்கு செல்லும் வைபவமும்,வீதியுலாவும் நடைபெற்றது.  

    திங்கள்கிழமை (ஏப்.22) இரவு காவிரி ஆற்றிலிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரையுடன் பச்சைக்காளியும், பவழக்காளியும் பெரியதெருவில் வீதியுலா நடைபெறவுள்ளது. ஏப்.23 ஆம் தேதி காலை 9 மணிக்கு பிறந்த வீடு சென்ற பச்சைக்காளியும், பவழக்காளியும் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 24 ஆம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai