Enable Javscript for better performance
பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச தொழில் பயிற்ச- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச சான்றிதழ் தொழில் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன.

    இது குறித்து அக்கல்லூரி முதல்வர் வீ. முத்துவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் மத்திய அரசு மனித வள மேம்பாட்டுத் துறையின் சிறப்புத் திட்டத்தின் மூலம் இலவச சான்றிதழ் தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில், கிராமப் புறங்களைச் சேர்ந்த படித்த, படிக்காத, வேலையில்லாத இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் தையல், எலக்ட்ரீசியன், வெல்டிங், கம்ப்யூட்டர், குந்தன் நகை தயாரிப்பு, பிளாஸ்டிக் வயர் கூடை தயாரிப்பு, மென் பொம்மை தயாரிப்பு ஆகிய இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

    பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள பிரதான மையத்திலும், தொண்டராம்பட்டு மேற்கு, காசாங்காடு, விக்ரமம், மல்லிப்பட்டினம், திருச்சிற்றம்பலம் ஆகிய இடங்களிலுள்ள விரிவாக்க மையங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

    இதில் சேர விரும்புவோர் ஏப்ரல் மாத இறுதிக்குள் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9486593989 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai