Enable Javscript for better performance
\\\"பெற்றோரும், ஆசிரியரும் மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகள்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "பெற்றோரும், ஆசிரியரும் மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகள்'

    By பட்டுக்கோட்டை  |   Published on : 22nd April 2013 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

      பெற்றோரும், ஆசிரியரும்தான் மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகள், அவர்கள் அறிவுரையை ஏற்று நடந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றார் பேரளம் வேதாத்திரி மகரிஷி ஆசிரமத்தின் தலைவர் மற்றும் மனவளக் கலை பேராசிரியர் ஜி. அழகர் ராமானுஜம்.

    பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 11-வது பட்டமளிப்பு விழாவில் 310 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி மேலும் அவர் பேசியது:

    வாழ்க்கையின் நோக்கம் பிறருக்காக வாழ்வதே என்பது வள்ளலார் காட்டிய வழி. அதைப் பின்பற்றி எல்லா உயிரையும் தன் உயிர் போல் நேசித்து உதவுவதன் மூலம் உண்மையான வாழ்க்கையை வாழலாம்.

    தங்களுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்பவர்கள் தங்கள் பெற்றோர்தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

    வாழ்க்கையில் அனைவருக்கும் பிரச்னை ஏற்படுவது இயற்கை. அதேசமயம் படித்தவர்கள் பிரச்னைக்குக் காரணமாக இருக்கக் கூடாது. பிரச்னையைத் தீர்ப்பவராக இருக்க வேண்டும் என்றார்.

    விழாவில், பல்கலைக்கழக தர வரிசையில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவி ஆர். நர்மதாவுக்கு தங்கப் பதக்கமும், மாணவிகள் பி. விக்டோரியா, சோபியா, சி. சரண்யா, ஏ. அமுதா ஆகியோருக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

    விழாவுக்கு கல்லூரித் தலைவர் மா. மாரிமுத்து தலைமை வகித்தார். முதல்வர் தி. உதயகுமார் முன்னிலை வகித்தார். செயலர் பொ. கணேசன் வரவேற்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai