Enable Javscript for better performance
வறுமையில் உள்ள குழந்தைகள் குறித்து புள்ளிவிவரம் சேகரிக்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வறுமையில் உள்ள குழந்தைகள் குறித்து புள்ளிவிவரம் சேகரிக்க அழைப்பு

    By தஞ்சாவூர்  |   Published on : 22nd April 2013 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் குறித்து புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணி மேற்கொள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இ. பால்ராஜ் தெரிவித்திருப்பது:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அளித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தஞ்சாவூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதுகாப்பு, பராமரிப்பு தேவைப்படும் வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன. இந்தப் பணியைச் சிறந்த தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. எனவே, இதுதொடர்பாக அரசு சாரா முகமைகள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிடமிருந்து விருப்பக் கடிதங்கள் கோரப்படுகின்றன.

    ஒவ்வொரு நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகள், போதுமான, தகுதி வாய்ந்த பணியாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள், நிபந்தனை விவரங்களை ட்ற்ற்ல்:ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்க்ங்ல்ஹழ்ற்ம்ங்ய்ற்ள்ள்ர்ஸ்ரீண்ஹப் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்களுடைய கருத்துகள், விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அரசு குழந்தைகள் இல்ல வளாகம், வ.உ.சி. நகர், தஞ்சாவூர் 613 007 என்ற முகவரிக்கு ஏப். 30-ம் தேதியன்றோ, அதற்கு முன்போ அனுப்பலாம். அதன் பிறகு பெறப்படும் கருத்துருக்கள் நிராகரிக்கப்படும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai