Enable Javscript for better performance
விவசாயிகள் விஞ்ஞானிகளாக மாறுவது அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    ஒவ்வொரு விவசாயியும் விஞ்ஞானியாக மாற வேண்டும் என்றார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்.

    தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதி கோவில் கிராமத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பண்ணைப் பள்ளித் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:

    பருவ மழை குறைவு, காவிரி நீர் பிரச்னை போன்றவற்றால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் விவசாயிகள் தங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்தப் பண்ணைப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் இல்லாதபோது என்னென்ன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கலாம் குறைந்த அளவில் கிடைக்கும் தண்ணீரை எப்படி பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்வது  உள்ளிட்டவை தொடர்பாக விவசாயிகள் கருத்துப் பரிமாறிக் கொள்ள இந்தப் பள்ளி உதவியாக இருக்கும். இதன் மூலம், விவசாயி கடந்த காலத்தில் தண்ணீர் இல்லாதபோது வெற்றிகரமாகச் சாகுபடி மேற்கொண்டதை மற்ற விவசாயிகளுக்குத் தெரிவிக்க வாய்ப்பாக இருக்கும்.

     அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது தொழில்நுட்பத் தகவல் விரைவாகவும், எளிதாகவும் சென்றடையும்.

    புவி வெப்பமயமாதல் காரணமாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தச்சூழ்நிலையில் தண்ணீர் வருமா மழை பெய்யுமா என்பன போன்ற சந்தேகங்கள் விவசாயிகளிடையே எழும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது சொட்டு நீர் பாசனம் செய்யும் முறையைப் பின்பற்ற வேண்டும். ஒரு சொட்டுத் தண்ணீரில் அதிக அளவில் மகசூல் பெறலாம்.

    இப்போது கிராமவாசிகள் அனுபவ ரீதியான கல்வியாளர்களாக இருக்கின்றனர்.

    விவசாயிகள் களத்தில் இறங்கி வேலை செய்வதால், ஆய்வகத்தில் பணியாற்றுபவர்களை விட அவர்களுக்கு அனுபவம் அதிகமாக இருக்கிறது. மேலும், ஒவ்வொரு விவசாயியும் விஞ்ஞானியாக மாற வேண்டும்  என்றார்   அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai