Enable Javscript for better performance
60 பேர் இருதய அறுவைச் சிகிச்சைக்குப் பரிந்துரை- Dinamani

சுடச்சுட

    

    60 பேர் இருதய அறுவைச் சிகிச்சைக்குப் பரிந்துரை

    By கும்பகோணம்,  |   Published on : 22nd April 2013 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை மருத்துவ முகாமில் 60 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    கும்பகோணம் கிராம விடியல் சிறு கடன் திட்டம் மற்றும் திருச்சி காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டி இணைந்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்பெறும் வகையில் இலவச இருதய பரிசோதனை முகாமினை நடத்தின.

    முகாமினை கிராம விடியல் சிறு கடன் திட்ட திருச்சி மண்டல மேலாளர் சதீஷ்தேவராஜ் தொடங்கி வைத்தார். டாக்டர்கள் யோகேஷ்சாத்தே மற்றும் சரவணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 520 பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, ஈசிஜி, இருதய ஸ்கேன் ஆகியவற்றை பரிசோதனை செய்தனர். இதில் 60 பேர் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச இருதய அறுவை சிசிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் கும்பகோணம், தாராசுரம், பாபநாசம், அய்யம்பேட்டை பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai