Enable Javscript for better performance
ஏப். 28 -ல் மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஏப். 28 -ல் மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம்

    By கும்பகோணம்  |   Published on : 23rd April 2013 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் வரும் ஏப். 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்  க. அன்பழகன்  வெளியிட்டுள்ள அறிக்கை:

    சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு வேண்டிய உபகரணங்களான மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, மோட்டார் சைக்கிள், சக்கர நாற்காலி, செயற்கை கால் மற்றும் கருப்புக்கண்ணாடி ஆகியவை வழங்குவதற்காக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் குழுவினர் நேரில் ஆய்வு செய்து தகுதியான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாம் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் வரும் ஏப். 28 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது.  முகாமில் பங்கேற்கவரும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய அடையாள அட்டை, குடும்ப அட்டை, இரண்டு போட்டோ ஆகியவற்றின் நகல்களை எடுத்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai