Enable Javscript for better performance
\\\"ஏழ்மையும், ஊழலும் இந்தியாவை பயமுறுத்தும் பிரச்னைகள்- Dinamani

சுடச்சுட

    

    "ஏழ்மையும், ஊழலும் இந்தியாவை பயமுறுத்தும் பிரச்னைகள்

    By 'கும்பகோணம்,  |   Published on : 23rd April 2013 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழ்மை, ஊழல், நீர், எரிசக்தி,தேசிய பாதுகாப்பு ஆகியவை இந்தியாவை பயமுறுத்தும் பிரச்னைகளாக மாற்றியுள்ளன என்றார் எழுத்தாளர் சங்கர் அய்யர்.

    கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் சிட்டி யூனியன் வங்கி முன்னாள் தலைவர் நாராயணனின் 8-வது ஆண்டு நினைவு சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு எழுத்தாளர் மற்றும் விமர்சகர் சங்கர் அய்யர் மேலும் பேசியது:

    இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு சுதந்திரத்திற்கு பிறகு ஒவ்வொரு பத்தாண்டிலும் ஏற்பட்ட பிரச்னைகள்தான் காரணம். பசுமைப் புரட்சி, வங்கிகளின் தேசிய மயமாக்கம், வெண்மைப் புரட்சி, மென்பொருள் துறை வளர்ச்சி, தாராளமயமாக்கல், தகவல் அறியும் உரிமை ஆகிய அனைத்தும், இந்தியா ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எதிர்கொண்ட பிரச்னைகளால் விளைந்த நன்மைகளாகும். ஒரு பக்கம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை இந்தியா அடைந்த போதிலும் நீர், எரிசக்தி, ஏழ்மை, ஊழல், தேசிய பாதுகாப்பு ஆகிய பிரச்னைகள் இந்தியாவை  பயமுறுத்தும் பிரச்னைகளாக மாற்றியுள்ளன. இத்தகு சூழலுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை நமது அரசியல்வாதிகள் மறந்ததே காரணமாகும் என்றார்.

    சாஸ்த்ரா திட்டம் மற்றும் மேம்பாட்டு புல தலைவர் வைத்திய சுப்பிரமணியம் வரவேற்றார். சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் காமகோடி நன்றி கூறினார். சாஸ்த்ரா பல்கலை கழக துணைவேந்தர் சேதுராமன், சிட்டி யூனியன் வங்கி தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள், சாஸ்த்ரா பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai