Enable Javscript for better performance
சமுதாயக்கூடம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்திற்குள்பட்ட சூழியகோட்டை ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை மணிசங்கர்அய்யர் எம்.பி. சனிக்கிழமை திறந்து வைத்தார்.

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மணிசங்கர்அய்யர் எம்.பி. சுற்றுப்பயணம் மேற்கொண்டு  மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ 7.50 லட்சத்தில் சாந்தி நகரில் கட்டப்பட்ட மின்மோட்டாருடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். புளியக்குடி ஊராட்சியில்  ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

    சூழியகோட்டை ஊராட்சியில் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தை திறந்து வைத்துப் பேசினார்.

    இந்நிகழ்ச்சிகளில் பாரத ஸ்டேட் வங்கி இயக்குநர் டி.ஆர்.  லோகநாதன், வட்டார காங்கிரஸ் தலைவர் என். பக்கிரிசாமிவாண்டையார்,  அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai