Enable Javscript for better performance
திருட்டு சம்பவங்களில் 4 பேர் கைது: 200 பவுன் நகைகள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    திருட்டு சம்பவங்களில் 4 பேர் கைது: 200 பவுன் நகைகள் மீட்பு

    By தஞ்சாவூர்,  |   Published on : 23rd April 2013 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடிச் சென்றதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 பவுன்கள் நகைகள் மீட்கப்பட்டன.

    இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தா.ச. அன்பு திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

    தஞ்சை நகரம், வல்லம் உள்கோட்டப் பகுதிகளில் நிகழ்ந்த பல்வேறு திருட்டு சம்பவங்களைக் கண்டுபிடிக்க தஞ்சை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். அர்ஜூனன் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் ஆர். சோமசுந்தரம் (மருத்துவக் கல்லூரி), கார்த்திகேயன் (தமிழ்ப்பல்கலைக்கழகம்), சிறப்பு உதவி ஆய்வாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் ஏப். 18-ம் தேதி நின்ற 4 இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரது கையில் இரும்பு கம்பி இருந்தது.

    இதைத் தொடர்ந்து, மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கஜலட்சுமி நகரை சேர்ந்த கஜேந்திரன் (30), ராமநாதபுரத்தை சேர்ந்த ஆனந்த் (32), ஈரோட்டைச் சேர்ந்த லோகநாதன் (32), பரமசிவம் (48) ஆகியோர் என்பதும், இரவில் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து திருடுவதற்காக இரும்புக் கம்பி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    தஞ்சை நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ஆகியவற்றை திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டார்.

    பின்னர், 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ஏறத்தாழ ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 200 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக நிகழ்ந்த 16 வழக்குகளில் இவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த வழக்குத் தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகிறோம்.

    தவிர, தங்கச் சங்கிலிப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகத் தனிப்படை இயங்குகிறது. ஒரு வாரத்தில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம் என்றார் அன்பு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai