Enable Javscript for better performance
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யக் கோரிக்கை

    By பேராவூரணி,  |   Published on : 23rd April 2013 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     தமிழக ஆசிரியர் கூட்டணியின் சேதுபாவாசத்திரம் வட்டார செயற்குழு கூட்டம் வட்டாரத் தலைவர் சி. பழனிவேல் தலைமையில்  அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி, விருப்பம் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் ஆசிரியர், அரசு அலுவலர், கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை எடுப்பது, பல மாதங்களாக பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக ஊதிய நிர்ணயம் செய்து வழங்கிட கேட்டும், ஒவ்வொரு ஆண்டும் பணிமூப்பு பட்டியலை ஆசிரியர் இயக்கங்களுக்கு வழங்கிட உதவி தொடக்கக்கல்வி அலுவலரை கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு இயக்க ஆலோசகர் ப. வெள்ளைச்சாமி, முன்னாள் வட்டாரத் தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆசிரியர்கள் கா. அன்பழகன், கமலராசன், பாலமுருகன், வாலண்டீனா, தவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டாரச் செயலர் செ. முத்தரசன் வரவேற்றார். ஈஸ்வரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai