Enable Javscript for better performance
பஸ் மோதி கிளீனர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் அருகே பஸ் மோதியதில் கிளீனர் உயிரிழந்தார்.

    கும்பகோணத்தில் தனுஷ் நடிக்கும் நையாண்டி சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் அருகே பம்பப்படையூர் என்ற இடத்தில் திங்கள்கிழமை படப்பிடிப்பு நடத்துவதாக இருந்தது. அதற்காக அக்குழுவினர் சிலர் அந்த ஊருக்கு சென்றனர். இந்த குழுவில் பஸ் ஓட்டுநராக சென்னையைச் சேர்ந்த நாகூர்மீரான் (32) என்பவரும், கிளீனராக கடலூர் மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த கௌதம் (19) என்பவரும் பணியாற்றினர். இருவரும் கேரவன் பஸ்சில் பம்பப்படையூர் சென்றனர். அப்போது பம்பப்படையூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே  பஸ்சை பின்புறம் எடுக்க நாகூர்மீரான் முயன்றார். அப்போது  கௌதம் மீது பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai