Enable Javscript for better performance
பாத யாத்திரை குழுவினருக்கு உணவுப் பொட்டலங்கள் - Dinamani

சுடச்சுட

    

    பாத யாத்திரை குழுவினருக்கு உணவுப் பொட்டலங்கள்

    By கும்பகோணம்  |   Published on : 23rd April 2013 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு  சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தின் சார்பில் உணவு பொட்டலங்கள் அளிக்கப்பட்டன.

    சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் விரதமிருந்து அவர்கள் ஊர்களிலிருந்து பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு  ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று வழிபடுவது பாரம்பரியமாக தொன்றுதொட்டு நடந்து வருகிறது. பல கி.மீட்டர்களை கடந்த பாதயாத்திரையாக வரும் அந்த பக்த குழுவினருக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் கும்பகோணம் சீனிவாசராமானுஜன் மையத்தில் 15 ஆயிரம் உணவு பொட்டலங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. சாஸ்த்ரா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சேதுராமன் அந்த உணவுப் பொட்டலங்களை பக்தர்களுக்கு வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai