பேராவூரணி அருகே தீக்குளித்த பெண் சாவு
By பேராவூரணி, | Published on : 23rd April 2013 03:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பேராவூரணி அருகே குடும்பத்தகராறில் தீக்குளித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்கென்னடி(25)ஓட்டுநர். இவரது மனைவி சர்மிளா (19). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களாகிறது. ஜான்கென்னடிக்கு குடிப்பழக்கம் உண்டாம்.
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி குடிபோதையில் வந்த கணவனை சர்மிளா கண்டித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் சர்மிளா தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சர்மிளா ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.