Enable Javscript for better performance
விஜயகாந்த் மீதான வழக்கு:ஜூன் 14-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    விஜயகாந்த் மீதான வழக்கு:ஜூன் 14-க்கு ஒத்திவைப்பு

    By தஞ்சாவூர்  |   Published on : 23rd April 2013 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குத் தொடர்பான விசாரணை ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    2012 ஆம் ஆண்டு ஆக. 10-ம் தேதி தஞ்சையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று உரையாற்றிய விஜயகாந்த் தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் ஏ. குப்புசாமி தொடுத்த வழக்கில்

    ஏப். 22-ம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இதன்படி, திங்கள்கிழமை (ஏப்.22) இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதில், விஜயகாந்த் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஏ. ஜகதீசன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் ஆஜராகினர்.

    மேலும், விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாலும், அவரது சொந்த தொகுதியில் மக்களைச் சந்திக்கவுள்ளதால்,விஜயகாந்தால் வர இயலவில்லை என மனு தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து, நீதிபதி ஜி. சரவணன் இந்த வழக்கை ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai