Enable Javscript for better performance
விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ. 50 லட்சம் முதல் கடனுதவி- Dinamani

சுடச்சுட

    

    விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ. 50 லட்சம் முதல் கடனுதவி

    By தஞ்சாவூர்,  |   Published on : 23rd April 2013 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ. 50 லட்சம் முதல் கடனுதவி வழங்கப்படுகிறது என்றார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பின் சார்பில் வேளாண் வணிக மேம்பாட்டுக்கு வழங்கும் சரி ஒப்புப் பங்கு உதவித் திட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

    இந்த மாவட்டம் முழுவதும் வேளாண்மை சார்ந்தது. சாகுபடி செய்த விளைபொருள்களைச் சந்தைப்படுத்துவதில் சாதாரண விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    ஆனால், இந்த மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மண்வளம், நீர் வளம், படித்தவர்கள் அதிகம் நிறைந்த இந்த மாவட்டத்தில் வேளாண் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பதற்காக இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவனம், ஆடுதுறை நெல் ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

    எனவே, இந்த மாவட்டத்தில் வேளாண் தொழில் சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்குச் சாதகமான சூழ்நிலைகள் இருக்கின்றன.

    அதற்கு உதவி செய்யும் விதமாக இந்த நட்பமைப்பு செயல்படுகிறது. இந்த நட்பமைப்பு வேளாண் சார்ந்த தொழிலை எவ்வாறு லாபகரமாகச் செயல்படுத்துவது, அதுதொடர்பாக பயிற்சி அளிப்பது, வங்கிக் கடனுதவி பெற உதவுவது போன்றவற்றை மேற்கொள்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் ரூ. 50 லட்சம் முதல் திட்ட வரைவுகளுக்குக் கடனுதவி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில், தோட்டக்கலை, பூக்கள் அபிவிருத்தி கலை, மூலிகைகள், மணம் தரும் தாவரங்கள், சிறு காடுகளின் உற்பத்திகள், பட்டுப்பூச்சி வளர்த்தல், உர விவசாய வகைகள், மீன் வளம் ஆகியவற்றுக்கு உதவி செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் கோழிப் பண்ணை, பால் பதப்படுத்தும் தொழில்கள் கிடையாது என்றார் பாஸ்கரன்.

    மத்திய வேளாண் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் தில்லி அலுவலகத் திட்ட அலுவலர் சந்திரபிரகாஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் திட்ட விளக்கவுரையாற்றினர். மேலும், விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளித்தனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் எஸ். ரகுவத்ஸசாரி, நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் எஸ்.டி. ரவிக்குமார், கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத் தலைவர் வெற்றிச்செல்வன், முன்னோடி வங்கி மேலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai