Enable Javscript for better performance
3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

    மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள ரஹ்மான் நகரிலும், நகராட்சி எல்லைக்கு உள்பட்ட 39, 40-வது வார்டுகளிலும் தண்ணீர் பந்தல்களை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.

    இதில், குடிநீர், நீர் மோர், பானகம், இளநீர், தர்பூசணி கீற்றுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

    இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், அதிமுக தொகுதி செயலர் துரை. திருஞானம், ஒன்றியச் செயலர் துரை. வீரணன், தெற்கு மாவட்ட மாணரவணி செயலர் ஆர். காந்தி, கிளைச் செயலர் அய்யப்பன், வட்டச் செயலர்கள் ராமமூர்த்தி, வெங்கட்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் நகரில் இதுவரை ஏறத்தாழ 30 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது என அதிமுகவினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai