Enable Javscript for better performance
ஆட்டோ தொழிலாளர்களுக்கு டோக்கன் வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஆட்டோ தொழிலாளர்களுக்கு டோக்கன் வழங்க வலியுறுத்தல்

    By தஞ்சாவூர்  |   Published on : 24th April 2013 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆட்டோ தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அங்கீகார வில்லை (டோக்கன்) வழங்க வேண்டும் என ஏஐடியுசி ஆட்டோ சங்கப் பேரவை வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இந்தச் சங்கத்தின் சிறப்பு மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கல்வித் தகுதியைக் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அங்கீகார வில்லையை அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குடிமனை இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும்.

    நல வாரியத்தில் பதிவு செய்ய, புதுப்பிக்க, விண்ணப்பங்கள் அளிக்க தொழிலாளியே நேரில் வர வேண்டும் என்ற நடைமுறையைக் கைவிட்டு முன்புபோல தொழில் சங்கங்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்கள், சான்றுகள், ஆணைகள், உரிமங்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பேரவை நிர்வாகிகள் வி.ஜி. ராஜேந்திரன், கே. ராஜா, ஆர். மலைச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி ஆட்டோ சம்மேளன மாநிலத் தலைவர் ஜெ. லட்சுமணன், மாவட்டச் செயலர் கே. மூர்த்தி, ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், மாவட்டத் தலைவர் ஆர். தில்லைவனம், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி பொதுச்செயலர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai