Enable Javscript for better performance
\\\"இயந்திர மொழிபெயர்ப்புக்கான உருவாக்கப் பணியில் பல்கலைக்கழகங்கள்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "இயந்திர மொழிபெயர்ப்புக்கான உருவாக்கப் பணியில் பல்கலைக்கழகங்கள்'

    By தஞ்சாவூர்,  |   Published on : 24th April 2013 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயந்திர மொழிபெயர்ப்புக்கான உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய இயக்குநர் ம. கணேசன்.

    தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதுமுனைவர் வ.ஐ.சு. நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியது:

    அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினூடே ஏற்பட்ட உலகமயமாதலால் உலகமே ஒரு சிறு கிராமம் போல மாறிவிட்டது. இதற்கு கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பமும் முதல் காரணமாகும். இவற்றின் வளர்ச்சியால் உலகின் ஒரு மூலையில் நடைபெறும் எந்த நிகழ்வும் பல்வேறு பகுதிகளுக்கும் ஒரே காலகட்டத்தில் உடனடியாகச் சென்றடைகின்றன. இந்த தகவல்கள் பல்வேறு உலக மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்படுகின்றன. இவை இயந்திர மொழிபெயர்ப்பினால் மட்டுமே சாத்தியமாகிறது.

    கணினி, இணையதளம், அலைபேசி ஆகியவற்றின் பயன்பாட்டை வெவ்வேறு மொழி பேசும் மக்களுக்கு அவரவர் மொழிகளிலேயே கிடைக்கச் செய்வதற்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைய வேண்டும். அப்போதுதான் தமிழ் போன்ற ஒரு மொழி மட்டுமே தெரிந்த மனிதனும் தொழில்நுட்ப வளர்ச்சியை அனுபவிக்க முடியும்.

    இணையம் போன்ற வலைதளங்களில் பல்வேறு மொழிகளில் பல்துறைச் செய்திகள் கிடைக்கின்றன. இயந்திர மொழிபெயர்ப்பு இருந்தால்தான் அவற்றை மற்றவர்கல் தங்களுடைய மொழியில் படிக்க இயலும். இத்தகைய இயந்திர மொழிபெயர்ப்பு ஆய்வுகள் உலகளவில் இந்தியா உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஐந்தாண்டுகளில் அவற்றின் பயனை மக்கள் அனுபவிப்பர். இயந்திர மொழிபெயர்ப்புக்குத் தேவையான கணினி, இலக்கணம், சொற்களஞ்சியம், சொல் வள அகராதி போன்றவை அண்ணாமலைப் பல்கலைக்ககழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உருவாக்கப்பட்டு வருகின்றன என்றார் கணேசன்.

    தமிழ்ப் பல்கலைக்கழக வளர் தமிழ்ப் புலத் தலைவர் ஆ. கார்த்திகேயன் தலைமை வகித்தார். காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவர் ரேணுகாதேவி சிறப்புரையாற்றினர்.

    தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவர் கி.விஸ்வநாதன் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ப. மங்கையற்கரசி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai