Enable Javscript for better performance
உடல் நல விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் நடையாளர் கழகம், தஞ்சாவூர் பிக் டெம்பிள் ரோட்டரி சங்கம் சார்பில் உடல் நலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  அண்மையில் நடைபெற்றது.

    நடையாளர் கழகத் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீனாட்சி மருத்துவமனை நிறுவனர் சேதுராமன் பேசியது: உடற்பயிற்சி, உடல் கட்டுப்பாடு, மனப்பயிற்சி, மனக்கட்டுப்பாடு ஆகிய நான்கையும் முறையாகக் கடைபிடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். இதன் மூலமாக ஆயுளை மேலும் அதிகரித்து நலமுடன் வாழலாம்.

    நாள்தோறும் நடைப்பயிற்சி, முறையான உணவு பழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் என்றார் அவர்.

    தஞ்சாவூர் பிக் டெம்பிள் ரோட்டரி சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai