Enable Javscript for better performance
எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து எல்ஐசி ஊழியர்கள், முகவர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 % உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை கோட்டத் தலைவர் ஆர். புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தென் மண்டல பொருளர் வி. ஜானகிராமன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதி சங்க மாநிலத் தலைவர் சிவகுரு, பொதுக் காப்பீட்டு ஊழியர் சங்க இணைச் செயலர் பி. சத்தியநாதன், முகவர் சங்கப் பொருளர் பி. தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai