Enable Javscript for better performance
கஞ்சா வைத்திருந்ததாக 2 பெண்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டையில் கஞ்சா வைத்திருந்ததாக 2 பெண்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    பட்டுக்கோட்டை பாக்கியம் நகரைச் சேர்ந்த பொன்னுசாமி மனைவி பகவதி (41), ஆங்கத் தேவர் மனைவி அமிர்தம் (55) ஆகிய இருவரும் கஞ்சா விற்று வந்தனராம்.

    தகவலறிந்த  பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் செங்கமலக்கண்ணன் தலைமையிலான போலீஸார், இருவர் வீட்டிலும் செவ்வாய்க்ழமை சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த மரத்தடியில் தலா 1,100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீஸார், இருவரையும் கைது செய்து, பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.  திருச்சி மகளிர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai