Enable Javscript for better performance
கருவூலத்தில் லஞ்சம்:  ஓய்வூதியர்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி சார்நிலைக் கருவூல அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கோப்புகள் நகரும் நிலை உள்ளதால் ஓய்வூதியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    இது குறித்து சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையாளர் மற்றும் கருவூலத்துறை இயக்குநருக்கு அனைத்து ஒய்வூதியர்கள் சார்பில் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : பேராவூரணி சார்நிலை கருவூல அலுவலகத்தில் பணிபுரியும் முக்கிய அலுவலர் ஒருவர் ஓய்வூதியம் தொடர்பாக  அலுவலகத்திற்கு வரும் கடிதங்களை பதுக்கி வைத்துக்கொண்டு ஓய்வூதியர்களை பலமுறை அலையவிட்டு ஆயிரக்கணகில் லஞ்சம் பெற்ற பின்னரே ஓய்வூதியம் வழங்குகிறார்.

    ஓய்வூதியதாரர் மறுமணம் செய்து கொண்டால் குடும்ப ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

    ஆனால் ரூ.50,000 வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, மறுமணம் செய்து கொண்டவர்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனால், அரசுப் பணம் மோசடி செய்யப்படுகிறது. வாழ்நாள் பதிவுக்கு வரும் ஒய்வூதியர்களிடம் இடைத்தரகர் மூலம் பணம் வசூலித்துக் கொண்டே பதிவு செய்கின்றனர்.

    எனவே, ஓய்வூதியதாரர்களையும், அரசு நிதியையும் மோசடி செய்துவரும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai