Enable Javscript for better performance
கல்லூரி ஆசிரியர்கள் முழக்கப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் செவ்வாய்கிழமை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரி எதிரில் நடைபெற்ற முழக்கப் போராட்டத்துக்கு கிளைச் செயலர் ரா. சதாசிவம் தலைமை வகித்தார். கிளைச் செயலர் க. ரமேஷ், மண்டலச் செயலர் க. துரையரசன் ஆகியோர் பேசினர்.

    தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் அமைதியற்ற சூழல் நிலவுவதற்குக் காரணமான கல்லூரிக் கல்வி இயக்குநரின் போக்கை கண்டித்தும், சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககம் மற்றும் மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்ககங்களில் நிலவும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும், கல்லூரி ஆசிரியர்களுக்கு வெளிப்படையான இடமாற்றல் பொதுக் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai