Enable Javscript for better performance
குடந்தையில் நாளை போக்குவரத்து மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி கோவிலின் சித்திரை பெரிய தேரோட்டம் வியாழக்கிழமை (ஏப்.25) காலை நடைபெறவுள்ளதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இக்கோவில் தேர், திருவாரூர் ஆழித்தேருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையான புகழ்பெற்றதாகும்.

    ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேரோட்டப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.  இதையொட்டி அன்று காலை 9 மணி  தொடங்கி தஞ்சை சாலையை தேர் கடக்கும் வரை கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு வரும் வாகனங்கள் கும்பேஸ்வரன் கோவில் மேலவீதி, திருமஞ்சனவீதி, காமாட்சி ஜோசியர் தெரு, பாலக்கரை, நீதிமன்றம், நால்ரோடு வழியாக பேருந்து நிலையம் வர வேண்டும் என  டிஎஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai