தென்னங் கன்றுகள் கண்காட்சி
By ிதஞ்சாவூர், | Published on : 24th April 2013 04:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை கோகோஸ் தோட்டத்தில் தென்னங் கன்றுகள் கண்காட்சி, சிறந்த விவசாயிக்கு தங்க மோதிரம் வழங்கல், லயன்ஸ் சங்க உறுப்பினருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.
திருவையாறு லயன்ஸ் சங்கம், திருவையாறு தென்னை ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு லயன் சங்கத் தலைவர் (தேர்வு) மணிகண்டன் தலைமை வகித்தார். கண்காட்சியில் பல்வேறு ஊர்களிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்து தென்னங் கன்றுகளை லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநர் ராஜகோபால் பார்வையிட்டு, தென்னை விவசாயி ஜே. மார்ட்டீனுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.இதுவரை 25 உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்துள்ள வை. கலியபெருமாளுக்கு மாஸ்டர் பின் அவார்டு வழங்கப்பட்டது. சங்க சாசன உறுப்பினர் எம்.ஆர். பஞ்சதம், துணைத் தலைவர் சண்முகம், பொருளர் ஜெஸ்டின் பால்ராஜ், பத்மாவதி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ன்னதாக, தென்னை ஆராய்ச்சியாளர் வா.செ. செல்வம் வரவேற்றார். வா.செ. ஜெய்சிபால் நன்றி கூறினார்.