Enable Javscript for better performance
பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டம்

    By கும்பகோணம்  |   Published on : 24th April 2013 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

    ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் இணைந்து கும்பகோணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டத்தை செவ்வாய்கிழமை நடத்தின.

    இதில், 6-வது ஊதியக்குழுவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 2004- 2006 வரை பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களை பணிவரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிநிலையில் கூடுதல் தலைமை ஆசிரியர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர். ராஜா,  நிர்வாகிகள் ஆர். பெரியசாமி, ஏ. வள்ளிமணாளன், டி. லீலாவதி, கே. பழனிவேல், டி. ராஜாராமன், எம். அய்யாறு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai